தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் பாடல் வரிகள்
| Movie | Psycho | ||
|---|---|---|---|
| படம் | சைக்கோ | ||
| Music | Ilaiyaraaja | ||
| Lyrics | Mysskin | ||
| Singers | Kailash Kher | ||
| Year | 2020 |
||
ஆண் : தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
ஆண் : தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
ஆண் : உன் பூமடி எனக்கு
கிடைக்கவுமில்லை
போகும் வழிக்கு உன் நினைவே துணை
ஆண் : ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
கண்மணியே என் பொன்மணியே
ஆண் : தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
ஆண் : சோகம் தாங்கி
பாரம் இறக்க யாரும் இல்லையே
தாகம் தீர்க்க
சுணையாய் இங்கு கருணை இல்லையே
ஆண் : கோபம் வாழ்வில் நிழலாய்
ஓடி ஆடி அலையா
பாசம் நெஞ்சில் கனலாய்
ஓங்கி ஏங்கி எரிய
ஆண் : காற்றே என்
காற்றே உன்
தாலாட்டில் இன்று தூங்கிடுவேன்
ஆண் : தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
ஆண் : காயம் செய்த மனிதன்
இன்று இருளில் கரைகிறேன்
நியாயம் செய்த மனதை
நினைத்து ஒளியில் நனைகிறேன்
ஆண் : காலம் மீண்டும் மாற
மாயம் கையில் இல்லை
ஞாலம் மீண்டும் மாற
பாரம் நெஞ்சில் இல்லை
ஆண் : தாயே என்
தாயே உன்
சேய் இங்கு கருவில் கலந்திடுவேன்
ஆண் : தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே
உன் பூமடி எனக்கு
கிடைக்கவுமில்லை
போகும் வழிக்கு உன் நினைவே துணை
ஆண் : ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
ஆராரோ பாடு கண்மணியே
கண்மணியே என் பொன்மணியே
ஆண் : {தாய்மடியில் நான் தலையை
சாய்க்கிறேன்
தங்கமே ஞான தங்கமே} (2)
