பார்த்து பார்த்து – ஆண் பாடல் வரிகள்
Movie Name  Nee Varuvai Ena
திரைப்பட பெயர் நீ வருவாய் என
Music S.A. Rajkumar
Lyricist Ravishankar
Singer S. P. Balasubrahmaniyam
Year 1999

ஆண் : பார்த்துப் பார்த்துக்
கண்கள் பூத்திருப்பேன் நீ
வருவாயென பூத்துப் பூத்துப்
புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
ஆண் : தென்றலாக நீ
வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா
மேகமாகிறேன்
ஆண் : வண்ணமாக
நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா
கவிதை ஆகிறேன்
பெண் குழு : நீ
வருவாயென நீ
வருவாயென
ஆண் : பார்த்துப் பார்த்துக்
கண்கள் பூத்திருப்பேன் நீ
வருவாயென பூத்துப் பூத்துப்
புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
ஆண் : கரைகளில்
ஒதுங்கிய கிளிஞ்சல்கள்
உனக்கென தினம்தினம்
சேகரித்தேன் குமுதமும்
விகடனும் நீ படிப்பாயென
வாசகனாகி விட்டேன்
ஆண் : கவிதை நூலோடு
கோலப் புத்தகம் உனக்காய்
சேமிக்கிறேன் கனவில்
உன்னோடு என்ன பேசலாம்
தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவெனக்
கரைந்தாலும் என் வாசல்
பார்க்கிறேன்
பெண் குழு : நீ
வருவாயென நீ
வருவாயென
ஆண் : பார்த்துப் பார்த்துக்
கண்கள் பூத்திருப்பேன் நீ
வருவாயென பூத்துப் பூத்துப்
புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
பெண் : ………………………..
ஆண் : எனக்குள்ள
வேதனை நிலவுக்குத்
தெரிந்திடும் நிலவுக்கும்
ஜோடியில்லை எழுதிய
கவிதைகள் உனை வந்து
சேர்ந்திட கவிதைக்கும்
கால்களில்லை
ஆண் : உலகில்
பெண்வர்க்கம் நூறு
கோடியாம் அதிலே நீ
யாரடி சருகாய் வந்தே
நான் காத்திருக்கிறேன்
எங்கே உன் காலடி
ஆண் : மணி சரிபார்த்து
தினம் வழிபார்த்து இரு
விழிகள் தேய்கிறேன்
பெண் குழு : நீ
வருவாயென நீ
வருவாயென
ஆண் : பார்த்துப் பார்த்துக்
கண்கள் பூத்திருப்பேன் நீ
வருவாயென பூத்துப் பூத்துப்
புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
ஆண் : தென்றலாக நீ
வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா
மேகமாகிறேன்
ஆண் : வண்ணமாக
நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா
கவிதை ஆகிறேன்
பெண் குழு : { நீ
வருவாயென நீ
வருவாயென } (2)
Tags: Nee Varuvai EnaNee Varuvai Ena Songs LyricsNee Varuvai Ena Lyrics, Nee Varuvai Ena Lyrics in TamilNee Varuvai Ena Tamil Lyricsநீ வருவாய் என, நீ வருவாய் என பாடல் வரிகள், நீ வருவாய் என வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *