ஊரெல்லாம் வேட்டு சத்தம் பாடல் வரிகள்

Movie Thilagar
படம் திலகர்
Music Kannan
Lyricist Annamalai
Singers         Mukesh, Anita
Year 2023
குழு : தன்னாரே நாரேநன்னே
தன்னாரே நாரேநன்னே
தன்னாரே தன்னாரே
தன்னாரே நாரேநன்னே
தன தன்னாரே நாரேநன்னே
 
பெண் : ஊரெல்லாம் வேட்டு சத்தம்
தெருவெல்லம் பாட்டு சத்தம்
பூமிக்கு புதுசாக உசுரோன்னு வர போகுது
புது உசுரோன்னு வர போகுது
 
பெண் : கை நிறைய வளையல் இட்டு
கன்னத்துல மஞ்சள் இட்டு
சாதி சனம் கூடி நின்னு
குலம் தழைக்க வாழ்த்துங்கடி
 
பெண் : ஆணோ அது பெண்ணோ
அத அழகா ரொம்ப அறிவா
புலி குட்டி போல ஒன்ன
பெத்து தர வேணுமடி
 
குழு : தன்னாரே நாரேநன்னே
தன்னாரே நாரேநன்னே
தன்னாரே தன்னாரே
தன்னாரே நாரேநன்னே
தன தன்னாரே நாரேநன்னே
 
பெண் : பூமிக்கு புதுசாக
உசுரோன்னு வர போகுது
புது உசுரோன்னு வர போகுது
 
பெண் : எங்களுக்கு குல சாமி
எப்போது நீங்க
உங்களைப்போல் பேர் எடுப்பான்
உங்க பிள்ளை
நல்லா படியா பிள்ளை
பொறந்திடா வேணும்
உள்ளங்கையில்
நாங்க வெச்சு தாங்கிடுவோம்
 
ஆண் : வானவில்லில் ஊஞ்சல் கட்டி
ஆட வெப்போம்
வெண்ணிலாவ பக்கத்தில
நிக்க வெப்போம்
 
ஆண் : மின்னலதான் கால் கொலுசா
போட்டு வெப்போம்
மேகத்துல மெத்தை செஞ்சி
தூங்க வெப்போம்
 
பெண் : ஆடி ராசாத்தி ஒரு ரோசா பூவாய்
உடனே கையில் பெத்து கொடு
 
ஆண் : புள்ளதாச்சி போல
ஒரு தெய்வம் தான் இல்லை
உயிர் சொமக்கும்
கருவறை தான் கோவிலடா
 
பெண் : ஆம்பளையா படைக்கிறது
பூமியில யாரு
ஆதி சக்தி எப்போதுமே
பெண் தானாடா
 
ஆண் : தாய் ஆக போறவள
வணங்கி நில்லு
வளைக்காப்பு நேரத்துல
நன்றி சொல்லு
 
பெண் : காசு பணம் வெச்சிருந்தா
பெருசு இல்ல
வாரிசுக்கு ஈடு இனி
யாதும் இல்லை
 
ஆண் : தாய் வீட்டுக்கிவ போக போற
திரும்பி வரணும் ரெண்டு பேரா
 
பெண் : தாய் வீட்டுக்கிவ போக போற
திரும்பி வரணும் ரெண்டு பேரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *