நான் தொழும் தெய்வமே பாடல் வரிகள்

Movie Carbon
படம் கார்பன்
Music Sam C.S
Lyricist Sathyaprakash
Singers         Si123
Year 2022

ஆண் : ஹோ…ஹோ….ஓ …ஹோ ….

 
ஆண் : நான் தொழும் தெய்வமே
போகுதே ஏன்
யார் இனி வாழ்விலே
ஏங்கினேன் நான்
 
ஆண் : ஆகாயம் சாயுதே
ஆன்மாவும் போகுதே
அப்பா உன் ஞாபகம் நீங்கிடுமா
ஆறாது காயமே தீராது சோகமே
அப்பா என் நெஞ்சமும் தாங்கிடுமா
 
ஆண் : நீதான் என் உதிரம்
நீதான் என் உலகம் அப்பா
 
ஆண் : தோளில் ஏறி ஊஞ்சல் ஆடி
உந்தன் மார்பில் தூங்கினேன்
கோவில் தேடி போன போதும்
உன்னை தானே வேண்டினேன்
 
ஆண் : அட அப்பாவின் வேர்வைதான் சோற்றிலே
தினம் உப்பாகும் எல்லோரின் வீட்டிலே
 
ஆண் : நீதான் என் உதிரம்
நீதான் என் உலகம் அப்பா
 
ஆண் : பாவம் என்ன நானும் செய்தேன்
பாச தீயில் வேகுறேன்
மீண்டும் உந்தன் வார்த்தை கேட்க
நானும் மண்ணில் வாழ்கிறேன்
 
ஆண் : இங்கு என் ஆயுள் சேர்த்தே நீ வாழ்ந்திடு
எங்கே சென்றாலும் என்னை நீ சேர்ந்திடு
அப்பா என்கிற ஆணி வேரையும் தொலச்சேன்
 
ஆண் : ஹோ…ஹோ….ஓ …ஹோ ….

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *