கண்ணே கண்ணே உன்னை பாடல் வரிகள்

Movie  Visithiran
படம் விசித்திரன்
Music G. V. Prakash Kumar
Lyricist Yugabharathi
Singers         Roshan Sebastian
Year 2022

ஆண் : கண்ணே கண்ணே

உன்னை கண்டதோர் வரமே
நெஞ்சில் வைத்தே
கொஞ்ச எண்ணுவேன் நாளெல்லாமே
 
ஆண் : சுடரி சுடரின் தொடரி
சுகமே சொந்தம் கை நீட்டுதம்மா
பகலே பகலின் எழிலே
வெளிச்சம் உள்ளே பூக்குதம்மா
 
ஆண் : அமுத கடலில் நானே
விழ இதயம் குலுங்குதே
மழையும் வெயிலும் சேர்ந்தே வர
உயிரும் தழும்புதே
 
ஆண் : சுடரி சுடரின் தொடரி
சுகமே சொந்தம் கை நீட்டுதம்மா
பகலே பகலின் எழிலே
வெளிச்சம் உள்ளே பூக்குதம்மா
 
ஆண் : பால் நிலவே நேரம் பார்த்து
கீழ் வருமோ சாதம் ஊட்ட
ஏழ் இசையும் கைகள் கோர்த்து
பாடிடுமோ தூளி ஆட்ட
 
ஆண் : கடவுள் கொடுத்த புதையலே
குழந்தை வடிவில் கிடைத்ததோ
மனதில் விரிந்த மகிழம் பூ
எதிரில் சிரித்ததோ
 
ஆண் : சுடரி சுடரின் தொடரி
சுகமே சொந்தம் கை நீட்டுதம்மா
பகலே பகலின் எழிலே
வெளிச்சம் உள்ளே பூக்குதம்மா
 
ஆண் : தேன் மழை போல் பேசும் பேச்சை
நாள் முழுதும் கேட்டால் போதும்
பூ விழிகள் காட்டும் காட்சி
நீர் மதகை மோதும் கோலம்
 
ஆண் : அருவி வழியும் அழகு மேல்
உனது சிரிப்பில் சிதறுதே
சிணுங்கும் உனது குரலிலே
உலகம் விடியுதே
 
ஆண் : கண்ணே கண்ணே
உன்னை கண்டதோர் வரமே
நெஞ்சில் வைத்தே
கொஞ்ச எண்ணுவேன் நாளெல்லாமே
 
ஆண் : சுடரி சுடரின் தொடரி
சுகமே சொந்தம் கை நீட்டுதம்மா
பகலே பகலின் எழிலே
வெளிச்சம் உள்ளே பூக்குதம்மா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *