இல்லாம இருந்து எனக்கு பாடல் வரிகள்

Movie Marutha
படம் மருத
Music Ilayaraja
Lyricist Pazhani Bharathi
Singers         Sid Sriram
Year 2022
ஆண் : இல்லாம இருந்து எனக்கு
பொறப்பு கொடுத்த தாயே
சொல்லாம உடலுக்குள்ள
உசுர வெச்ச தாயே
நீ சுமந்த கடன் தீர்க்க
யாராலும் ஆகாது
கை மாறு செஞ்சாலும்
சரிசமமா போகாது
 
ஆண் : இல்லாம இருந்து எனக்கு
பொறப்பு கொடுத்த தாயே
சொல்லாம உடலுக்குள்ள
உசுர வெச்ச தாயே
 
ஆண் : காணாத கண்ணீரு
கண்ணுக்குள்ள நின்னாலும்
தேனாக நீ என்னை
மடியில் ஏந்தி கொண்டாயே
நீரோடு சேறாக
நான் கலங்கி வந்தாலும்
தோழாட மார்போட
தாங்கி கொண்ட என் தாயே
 
ஆண் : அம்மா உன் கருணை தானே
மேகமாக மாறுது
உன்னோட அன்ப சொல்ல வானம் கூட போதாது
உன்னை போல் சொர்க்கம் இங்கே வேறு ஏது
 
ஆண் : இல்லாம இருந்து எனக்கு
பொறப்பு கொடுத்த தாயே
சொல்லாம உடலுக்குள்ள
உசுர வெச்ச தாயே
 
ஆண் : என்னென்ன ஆனாலும்
சோகம் எல்லாம் உன்னோட
முன்னாலும் பின்னாலும்
யாருமில்லை என்னோட
எங்க எங்க போனாலும்
வானம் தானே கூட வரும்
இன்ப துன்ப சூழலிலும்
உன் மனசு பின்ன வரும்
 
ஆண் : தாயிகுள்ள ஈசன் உண்டு
பிள்ளை மட்டும் தான் அறியும்
ஈசனுக்கு தாயிருந்தால்
அன்னை நெஞ்சம் தான் அறியும்
உன்னை போல் சொந்தம் இங்கே வேறு ஏது
 
ஆண் : இல்லாம இருந்து எனக்கு
பொறப்பு கொடுத்த தாயே
சொல்லாம உடலுக்குள்ள
உசுர வெச்ச தாயே
நீ சுமந்த கடன் தீர்க்க
யாராலும் ஆகாது
கை மாறு செஞ்சாலும்
சரிசமமா போகாது
 
ஆண் : இல்லாம இருந்து எனக்கு
பொறப்பு கொடுத்த தாயே….

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *