ஐஸ் கட்டி குருவி பாடல் வரிகள்

Movie D Block
படம் டி பிளாக்
Music Ron Ethan Yohann
Lyricist S.Gnanakaravel
Singers         Pradeep Kumar and
Ron Ethan Yohann
Year 2022

ஆண் : ஐஸ் கட்டி குருவி

உருகி உருகி பார்த்துட்டு போகயில
காலில தரயில
மின்மினி கண்ணழகி சிமிட்டி சிமிட்டி
கண்ணால பேசயில என்னால முடியல
 
ஆண் : உன பாக்கும் முன்ன சொதப்பலா திருஞ்சேன்
உன பார்த்த பின்ன கலக்கலா மாறிட்டேன்
மயிலே உன் ஸ்மைலு விட்டமின தரும் வெயிலு
அடடா உன் எழிலு ஆலமர நிழலு
 
ஆண் : அடங்காம உன்ன வட்டமிட்டு அலையும் மனசு
அலட்டாம ஒரு முறை நீ சிரிச்சு பேசு
ரசகுல்லா பார்வை தருதே போத
 
ஆண் : தேவதை சாப்பிடும் போது
சிந்துற பருக்க மீது
எறும்பாக ஆசை வானவிலாகுது மீச
லேசா நீ பார்க்க
அத நானும் ரசிக்க
டே ஆச்சு நைட்டு
தூக்கம் கிலோ என்ன ரேட்டு
 
ஆண் : நீயும் நானும் கைகோர்த்து போனா
பாக்கும் சுவரெல்லாம் பூக்கும்
நீயும் நானும் தோள் சாய்ந்து பேச
வானம் ஒட்டு கேட்க வரம் கேட்கும்
 
ஆண் : ஹாய் சொல்லயில இதயம் குதிக்குமே
பாய் சொல்லயில சிலையா நிக்குமே
என் பைக் இல் நீ ஏற ஃலைட் ஆகுமே
 
ஆண் : ஐஸ் கட்டி குருவி
உருகி உருகி பார்த்துட்டு போகயில
காலில தரயில
மின்மினி கண்ணழகி சிமிட்டி சிமிட்டி
கண்ணால பேசயில என்னால முடியல
 
ஆண் : உன பாக்கும் முன்ன சொதப்பலா திருஞ்சேன்
உன பார்த்த பின்ன
கலக்கலா மாறிட்டேன்
மயிலே உன் ஸ்மைலு
விட்டமின தரும் வெயிலு
அடடா உன் எழிலு ஆலமர நிழலு
 
ஆண் : அடங்காம உன்ன வட்டமிட்டு அலையும் மனசு
அலட்டாம ஒரு முறை நீ சிரிச்சு பேசு
ரசகுல்லா பார்வை தருதே போத

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *