அவன் பாத்து சிரிக்கல பாடல் வரிகள்

Movie Kodiyil Oruvan
படம் கோடியில் ஒருவன்
Music Uthaya Kumar
Lyrics Mohan Rajan
Singers         Malvi Sundaresan
Year 2021
பேசும் தூரம் நின்றானே
பேசா காதல் கொண்டேனே
உணர்வானோ 

அவன் பாத்து சிரிக்கல
நான் பறக்க தொடங்கிட்டேன்
அவன் பேசி சிரிக்கல
நான் உருக தொடங்கிட்டேன் 

அவன் ஜாட காட்டல
நான் சரிய தொடங்கிட்டேன்
அவன் கூட நடக்கல
நான் பொலம்ப தொடங்கிட்டேன் 

அவன் திரும்பி பாக்கல
நான் விரும்ப தொடங்கிட்டேன்
அவன் மனசு புரியல
நான் மயங்க தொடங்கிட்டேன் 

அவன் கண்ணா காட்டல
நான் கரைய தொடங்கிட்டேன்
அவன் கைய புடிக்கதான்
நான் கனவு கண்டுட்டேன் 

அவன நான் பார்த்தா
ஒரு குழந்தையா குதிப்பேன்
அவன் என்னை பார்த்தா
ஒரு குமரியா ரசிப்பேன் 

அவன நான் பார்த்தா
ஒரு குழந்தையா குதிப்பேன்
அவன் என்னை பார்த்தா
ஒரு குமரியா ரசிப்பேன் 

அவன் பாத்து சிரிக்கல
நான் பறக்க தொடங்கிட்டேன்
அவன் பேசி சிரிக்கல
நான் உருக தொடங்கிட்டேன் 

அவன் ஜாடை காட்டல
நான் சரிய தொடங்கிட்டேன்
அவன் கூட நடக்கல
நான் பொலம்ப தொடங்கிட்டேன் 

கண்ணுக்குள்ள பேசி சிரிச்சேன்
ஆசையெல்லாம் தேடி குவிச்சேன்
கண்டபடி ஆடி துடிச்சேன்
எல்லாம் உன்னாலே 

நெஞ்சுக்குள்ள கட்டி துடிச்சேன்
என் நிழல ஒட்டி ரசிச்சேன்
என்னென்னவோ சொல்ல நெனச்சேன்
சொல்லி சொல்லி என்ன தொலைச்சேன் 

கடிகாரம் பார்க்காம
உனக்காக இருக்குறேன்
கன நேரம் பிரிஞ்சாலும்
கணமா நான் உறங்குறேன்
கூடு விட்டு கூடு பாயும்
நாள் தேதி பாக்குறேன் 

ஒட்டி நடக்கல கட்டி புடிக்கல
ஆனாலும் நெஞ்சோரம் ஏங்க தொடங்கிட்டேன்
ஒன்னும் புரியல சொல்ல தெரியல
ஏதேதோ நானும் தான் எண்ண தொடங்கிட்டேன் 

ஒட்டி நடக்கல கட்டி புடிக்கல
ஆனாலும் நெஞ்சோரம் ஏங்க தொடங்கிட்டேன்
ஒன்னும் புரியல சொல்ல தெரியல
ஏதேதோ நானும் தான் எண்ண தொடங்கிட்டேன்
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *