ஆணங்கே பாடல் வரிகள்

Movie Dev
படம் தேவ்
Music Harris Jayaraj
Lyrics Thamarai
Singers         Hariharan, Krish, Tippu
Year 2019

அணங்கே சிணுங்கலாமா
நெருங்கி அணைக்க நானிருக்க

இது தான் தருணம் தனியே வரணும்

தெரிந்தே நடிக்கலாமா
இதழை துணிந்து யார் கொடுக்க

முதலில் தரணும் பிறகே பெறணும்

ஓ கரை தாண்டியே வந்து
புயல் போல மோது
விழி என்பதன் பேரு
கயல் கொண்ட மாது

இமை சாமரம் வீசி
என்னை அள்ளும் போது
சுமை நீங்கியே
நானும் சாய்ந்தேன்
சுகம் வேறு எது

சுனந்தா பறந்து வா வா
உலகை மறந்து போய் விடலாம்
ஆஹா ஒஹோஒ எஹெய் ஆஹா

சுனந்தா விரைந்து வா வா
உருகி கரைந்து சாய்ந்திடலாம்
ஆஹா ஒஹோஒ எஹெய் ஆஹா

பகலெல்லாம் பைத்தியமாய்
உன்னை எண்ணி ஏங்கி
ராத்திரிக்கு காத்திருந்த ரதி நானே

ஓ வெண்ணிலாவை அள்ளி வீசி
வெளிச்சங்கள் ஆக்கி
சிரிப்பது இயற்கையின் சதி தானே

ம் அறை எங்கும் உந்தன் உடைகள்
சுவரெங்கும் உன் படங்கள்
நடந்தாலும் உந்தன் தடங்கள்
பொல்லாத நினைவுகள் ஓ ஓ

அணங்கே சிணுங்கலாமா
நெருங்கி அணைக்க நானிருக்க
இது தான் தருணம் தனியே வரணும்

தெரிந்தே நடிக்கலாமா
இதழை துணிந்து யார் கொடுக்க
முதலில் தரணும் பிறகே பெறணும்

உனை நான் எதற்கு பார்த்தேன்
விழுங்கும் விழியை சாடுகிறேன்
அடாடா அழகா விழிகள் கழுகா

நொடியும் பிரிய மாட்டேன்
பிரிந்தால் உதிர்ந்து போய்விடுவேன்
இதயம் எனது உதிரம் உனது

ஏ கரை தாண்டியே வந்து
புயல் போல மோது
விழி என்பதன் பேரு
கயல் கொண்ட மாது

இமை சாமரம் வீசி
எனை அள்ளும் பொது
சுமை நீங்கியே
நானும் சாய்ந்தேன்
சுகம் வேறு எது

சுனந்தா பறந்து வா வா
உலகை மறந்து போய் விடலாம்
ஆஹா ஒஹோஒ எஹெய் ஆஹா

சுனந்தா விரைந்து வா வா
உருகி கரைந்து சாய்ந்திடலாம்
ஆஹா ஒஹோஒ எஹெய் ஆஹா

சுனந்தா பறந்து வா வா
உலகை மறந்து போய் விடலாம்
ஆஹா ஒஹோஒ எஹெய் ஆஹா

சுனந்தா விரைந்து வா வா
உருகி கரைந்து சாய்ந்திடலாம்
ஆஹா ஒஹோஒ எஹெய் ஆஹா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *