அம்மா என் அம்மா நான் போகின்ற பாடல் வரிகள்
Movie | Kanam | ||
---|---|---|---|
படம் | கனம் | ||
Music | Jakes Bejoy | ||
Lyricist | Uma Devi | ||
Singers | Sid Sriram | ||
Year | 2022 |
ஆண் : அம்மா என் அம்மா
நான் போகின்ற திசை எங்கும் நீ அம்மா
ஓ அம்மா என் அம்மா
என் இசை தேடும் சுரம் யாவும் நீ அம்மா
ஆயிரம் ஆனாலும் அன்னை போல் நேரிலே
பேசிட கூடுமோ தெய்வம் இங்கே
ஆண் : ஒரு முறை என்னை பார் அம்மா
கடவுளின் கண்கள் நீ அம்மா
காவலில் உன் போல் ஏதம்மா
உன் போல் அம்மா யார் அம்மா
ஆண் : விரல்களை பிடித்திடும் போது
கிடைக்கிதே பிரபஞ்சமே
தாயே உன் மடியில் இருந்தால் போதும் அம்மா
ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா தாயே
தாய்மையின் உச்சம் நீ அம்மா
தாயே உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா
ஆண் : செல்லமாய் பேரிட்டே நீ எனை கூப்பிட
ஊட்டிடும் சோற்றிலும் பாசத்தை ஊட்டிட
காட்டிடும் தீபத்தில் ஆயுளை கூட்டிட
எனக்காய் துடிக்கும் இதயம் நீ அம்மா
நீ இல்லாமல் நானும் தீவாகின்றேனே
நீர் இல்லாமல் சாகும் மீனாகின்றேனே
நீ வந்தாலே போதும் வாழ்வாதாரமே
உனை தாண்டி உலகம் ஏதிங்கே
ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா
கடவுளின் கண்கள் நீ அம்மா
காவலில் உன் போல் ஏதம்மா
உன் போல் அம்மா யார் அம்மா
ஆண் : நினைவுகள் இருப்பதுனாலே இருக்கிறேன் உயிருடன்
தாயே உன் நினைவில் வாழ்ந்தால் போதும்..
பெண் : கர்நாடிக் ………………..
ஆண் : {விரல்களை பிடித்திடும் போது
கிடைக்கிதே பிரபஞ்சமே} (3)
தாயே உன் மடியில் இருந்தால் போதும் அம்மா
ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா தாயே
தாய்மையின் உச்சம் நீ அம்மா
தாயே உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா
ஆண் : அம்மா …!